மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது இசை வாத்தியங்கள் வாசித்தனரா ?

Misleading சர்வதேசம் | International


INTRO :

தேர்தல் முடிவுக்கு பின் மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது அதனை குழப்பும் விதமாக இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “#மேற்கு வங்கத்தில் மோடி அரசின் RSS இந்து பரிவார் ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை  சங்கிகள் முஸ்லிம்களின் பள்ளி வாயிலில் வந்து தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது சங்கு ஊதி அங்கே குழம்பம் ஏற்படுத்தினார்கள் ..

ஏண்டா.. அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் அவர்கள் பாட்டில் தொழுகிறார்கள் அதை போய் குழப்பி விடுகிறீர்கள்.. நீங்கள் நல்லா இருப்பீங்களா…‼️“என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (04.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

கடந்த மே 4 ஆம் திகதி இந்தியாவின் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பின்னர் மேற்கு வங்கத்தில் மோடி அரசு வந்தவுடன் பள்ளியில் தொழுகை வேளையில் இசை கருவிகளை வாசித்து அவர்களின் தொழுகையினை குழப்பும் விதமாக செயற்பட்டதாக ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை தொடர்பாக  நாம் இந்திய ஊடகங்கள் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக செய்தி எதுவும் வெளியிட்டுள்ளனவா என ஆய்வினை மேற்கொண்டோம்.

அவ்வாறான செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆகவே குறித்த காணொளியின் சில பகுதிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, தற்போது வைரலாகின்ற காணொளி கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்த காணொளி கிடைக்கப்பெற்றது.

அதில் இந்தியாவில் உள்ள பள்ளிவாசலில் இசை கருவிகள் வாசிக்கப்படுகின்றது என பதிவிட்டிருந்தனர்.

Facebook Link  

ஆகவே குறித்த சம்பவம் தேர்தலில் முடிவுகளுக்கு பின்னர் நடந்த சம்பவம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக நாம் மேற்கொண்ட ஆய்வில்  “Gochi Shahi Dorbar Sharif” என்ற டிக்டொக் கணக்கில் கடந்த வருடம் ஜூன் மாதம் 12 ஆம் திகதி (12.06.2025) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது. 

TikTok Link. 

பதிவில் இருந்த தகவல்களுக்கு அமைய பங்களாதேஷில் அமைந்துள்ள Gochi Shahi Dorbar Sharif என்ற மதத்தளம் ஆகும். 

நாம் குறித்த Gochi Shahi Dorbar Sharif எனும் keyword இனை கூகுள் தேடு தளத்தில் பதிவிட்டு தேடிய போது Gochi Shahi Dorbar Sharif இன் உத்தியோகப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது. 

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது இசை வாத்தியங்கள் வாசித்தனர் என பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது இசை வாத்தியங்கள் வாசித்தனரா ?

Written By: S.G.Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *