
INTRO :
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில்“ இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கிய ரொனால்டோ !!
“என இம் மாதம் 9 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (09.12.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த மாதம் நாட்டை தாக்கிய தித்வா சூறாவளியால், பல உயிர்கள் இழக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள சூழலில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உட்பட உலகின் பல நாடுகள், நாட்டை அதன் வீழ்ச்சியில் இருந்து மீள உதவுவதற்காக பொருள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்த விடயமே.
இலங்கையின் பிரதான ஊடகங்கள் நிதி நன்கொடைகள் மற்றும் மற்றைய நாடுகளால் வழங்கப்படும் ஆதரவை முன்னுரிமைப்படுத்தும் சூழலில், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஒருவர் குறித்த நிதி உதவியை வழங்கினால், அது சர்வதேச ஊடகங்களிலும், முக்கிய ஊடகங்களிலும் முன்னணி செய்தியாக வெளிவந்திருக்க வேண்டும். இருப்பினும், ரொனால்டோ அல்லது அவரது தொண்டு நிறுவனம் இலங்கைக்கு இவ்வளவு பெரிய நிதி நன்கொடை அளித்ததாக எந்த ஊடகமும் தெரிவிக்கவில்லை.
அதன்படி, உண்மைகளை மேலும் சரிபார்க்க, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அனைத்து அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளை நாங்கள் ஆய்வு செய்தோம், ஆனால் அந்த கணக்குகள் எதிலும் அவர் இலங்கைக்கு எந்த நிதி உதவியும் வழங்கியதாக குறிப்பிடவில்லை.
அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அரசாங்கம் ‘Rebuilding Sri Lanka’ என்ற நிதியத்தை நிறுவியது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கடந்த 4ஆம் திகதி இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கான நிதியை இலங்கை வங்கியின் கணக்கில் ரூ. 635 மில்லியனுக்கும் அதிகமான தொகை பெறப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு நாணய வைப்புகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய வங்கிக் கணக்கிற்கு ரூ. 61 மில்லியன் கிடைத்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பெறப்பட்ட மொத்த மானியங்கள் 1893 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளன. இதுவரை 33 நாடுகளின் நாணயங்களில் இருந்து இலங்கை பணம் பெற்றுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது இலங்கைக்கு ரொனால்டோ 10 மில்லியன் டொலர்களை வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளில் உண்மையில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
ரொனால்டோ இதற்கு முன் பேரிடர்களின் போது நிதி நன்கொடைகள் வழங்கியதாக பரவிய தவறான தகவல்கள்
நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, இதற்கு முன்னரும், உலகின் பிற நாடுகள் கடுமையான பேரிடர்களை எதிர்கொண்ட வேளையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ நன்கொடை அளிக்க முன்வந்தார் என்று சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டன.
கேரளா வெள்ளப்பெருக்கின் போது இந்திய ரூ. 77 கோடி நன்கொடை வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தது, மேலும் இது ஒரு பொய்யான செய்தி என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது. Link 1 | Link 2 | Link 3
இதற்கிடையில், கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 8 மில்லியன் டாலர்களை அவர் நன்கொடையாக வழங்கியதாகவும், பின்னர் அவர் 8 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கவில்லை என்றும் Save the Children அறிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. Link 1
2016 ஆம் ஆண்டில், பிரேசிலிய கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு கால்பந்து வீரர் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் மரணித்தபோது, கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கியதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. பின்னர் அவையும் பொய்யானவை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. Link 1 |
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என பரவுகின்ற தகவல் தவறானவை என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினாரா..?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

