நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சியாளர் தெரிவித்த கருத்து உண்மையா ? 

False இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel

INTRO :

நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சியாளர் தெரிவித்த கருத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “2039இல் நாமல் ராஜபக்ஷ இரண்டு முறை ஜனாதிபதியாக பதவியேற்று நாமால் விலகும்போது, லிமினி (நாமல் ராஜபக்ஷவின் மனைவி) அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டை பொறுப்பேற்பார்.

அப்போது லிமினியின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்க கேசரா (நாமல் ராஜபக்ஷவின் மூத்த மகன்) 34 வயது முதிர்ந்த தலைவராக இருப்பார். “என இம் மாதம் 16 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (16.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான பாசன் கஸ்தூரி என்பவர், இணையத்தில் வைரலாகின்றவாறு  அறிக்கையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் தளங்களிலோ அல்லது வேறு எங்கேயோ வெளியிட்டிருக்கிறாரா என நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம், ஆனால் அப்படிப்பட்ட எந்த செய்தியும் எமக்கு கிடைக்க பெறவில்லை.

சிங்கள மொழியில் முதலில் பரவிய குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் காட்டப்பட்டிருந்தப்படி, News Lap பேஸ்புக் பக்கத்தில் அவ்வாறான பதிவு ஏதேனும் வெளியிடப்பட்டிருக்கிறதா என நாம் குறித்த பேஸ்புக் பக்கத்தினை ஆய்வு செய்தபோது, சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றதை போன்று, 2029 முதல் நாமல் ராஜபக்ஷ இரண்டு முறை ஜனாதிபதியாவார் என்றோ, நமலின் மனைவி லிமினி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பார் என்றோ, அதன்பிறகு லிமினி மற்றும் நமலின் மகன் கேசர நாட்டைப் பொறுப்பேற்கும் ஒரு முதிர்ந்த தலைவராக இருப்பார் என்றோ எந்த பதிவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணக்கிடைக்கவில்லை.

மேலும் குறித்த ஆய்வின் போது, பாசன் கஸ்தூரி என்ற நபர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையை காணக்கிடைத்தது. அதில், “உலக யுத்தமில்லை , வேற்றுக்கிரகவாசிகள் படையெடுத்தாலும், ராஜபக்ஷக்களுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் அனுரவை அவரது பதவியிலிருந்து விலக நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்திருந்தமையை காணக்கிடைத்தது.

Facebook | Archived Link 

குறித்த கருத்தினை பாசன் கஸ்தூரி ஒரு நேர்காணலின் போது தெரிவித்திருந்தமை எமக்கு கிடைக்கப்பெற்றது. ஆகவே நாம் அந்த நேர்காணலின் போதோ அல்லது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் போதோ சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமை போன்று எந்த விதமான கருத்தினையும் அவர் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

இருப்பினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சமீப காலங்களில் விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் என்றும், நாமல் ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதியாக இருப்பார் என்றும் பாசன் கஸ்தூரி தெரிவித்திருந்தார்.

மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த பதிவு பொய்யானது என்று கூறி, அவர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது 

Facebook | Archived Link 

மேலும், இதனை உறுதி செய்ய நாங்கள் அவரிடம் விசாரனை செய்தபோது, ​​பாசன் கஸ்தூரி சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை என்றும், தான் கூறாத ஒரு கருத்தைக் கூறியதாகக் கூறி சில அரசியல் கட்சிகளால் ஒரு பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் தெரிவித்த கருத்து என பரவும் செய்தி தவறானவை  என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: நாட்டில் இனி வருகின்ற ஜனாதிபதிகள் குறித்து பொதுஜன பெரமுன கட்சியாளர் தெரிவித்த கருத்து உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *