உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குதல் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்ததா? 

Misleading இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel


INTRO :

உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகளள் வழங்கும் செயன்முறை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளதாக  சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயர்!” என இம் மாதம் 23 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (23.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

வாகன உரிமையாளர்கள் தமது பெயர்கள் பொறிக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் (Number Plates) பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய முறையொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளதா என அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்தோம் குறித்த தேடலின் போது அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

போக்குவரத்து அமைச்சின் ஊடக பேச்சாளர்

இது தொடர்பாக நாம் போக்குவரத்து அமைச்சின் ஊடக பேச்சாளரை தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த நடவடிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்த முடியாதென்றும், அதற்கு முன் கணினி கட்டமைப்பு மேம்படுத்தல் பணிகள் முன்னெடுத்த பின்னரே பிரத்தியேக  பெயர்கள் பொறிக்கப்பட்ட இலக்கத் தகடு வழங்கலுக்கான பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கு குறிப்பிட்ட காலம் செல்லும் என தெரிவித்தார்.

அத்துடன் புதிய நிறுவனத்துடனான மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாகனங்களுக்கான இலக்கத் தகடு விநியோகமும் மே மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இணையத்தில் தற்போது பேசுப்பொருளாக அமைந்துள்ள வாகன உரிமையாளர்கள் தமது பெயர்கள் பொறிக்கப்பட்ட இலக்கத் தகடு பெறுதல் விடயம் எதனால் பரவப்படுகின்றது என ஆய்வினை மேற்கொண்டோம். 

அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு (COPF) மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே அதில் இடம்பெற்ற கலந்துரையாடல் காரணமாக தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

ஆகவே நாம் குறித்த கலந்துரையாடல் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் எழுந்த சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

மாகாண அடையாளங்கள் நீக்கம்

நிதிக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இதற்கு முன்னர் வாகன இலக்கத் தகடுகளில் மாகாண அடையாளங்கள் (Provincial Indicators) காணப்பட்டதாகவும், அவை தற்போது நீக்கப்பட்டமைக்கான காரணம் என கேள்வி எழுப்ப

மோட்டார் போக்குவரத்து குழு இது குறித்து விளக்கம் தருகையில்:

குறித்த நடவடிக்கை இலங்கை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கை ஆகும். குறிப்பாக “யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனம் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்பதை அடையாளம் காண ‘அதிர்வெண் அடையாளத்துடன்’ (Frequency ID) மாகாண குறியீடுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த அடையாளத்தை வாசிக்க பொலிஸாரிடம் உரிய கருவிகள் (Readers) அப்போது இருக்கவில்லை. எனவே, தற்போது அத்தகைய தேவை தற்போது இல்லை என்பதால் மாகாண குறியீடுகளை நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.”

தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகள் (Personalized Number Plates): 

ஹர்ஷ டி சில்வா ஏன் மக்கள் 1 மில்லியன் கொடுத்து முன்னால் இருக்கும் இலக்கங்களை பெறுகின்றனர் என கேட்டமைக்கு

இந்த திட்டத்தினை ஆரம்பித்தமையே அரசாங்கத்திற்கான வருவாயினை அதிகரித்துக்கொள்ளுவதற்காக, தற்போது வழங்கப்படுகின்ற வாகன தகடு இலக்கத்தில் இருந்து ஒரு இலட்சம் வரையான முன்னால் உள்ள வாகன தகடு இலக்கங்கள் வழங்க முடியும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கத்திற்கு அமைய 1 மில்லியன் வரை அறவிடப்படும்.

முன்னால் இருக்கும் 10000 இலக்கத்திற்கு 1 இலட்சம் என படிப்படியாக அதிகரித்து 50000 முதல் ஒரு இலட்சத்திற்கான இலக்கத்திற்கு 1 மில்லியன் வரை அறவிடப்படும் என தெரிவித்தார். 

ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்புகையில், “பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவின் கார் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அவரது வாகன இலக்கத் தகட்டில் ‘Dudley’ என்ற பெயரையே பொறித்துக்கொள்ள முடியாதா?” எனக் கேட்டார்.

அதற்கு “நிச்சயமாக முடியும் சார். அந்த முறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். எமது கணினி கட்டமைப்பு (System update) புதுப்பிக்கப்பட்ட பின்னர், இவ்வாறான விசேட செயற்திட்டத்தை ஆரம்பிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

மீண்டும் ஹர்ஷ டி சில்வா இது எப்போது நடைமுறைக்கு வரும் என கேள்வி எழுப்பியதற்கு, எப்போது குறித்த கணினி கட்டமைப்பினை வடிவமைக்க முடியுமோ.. அதிலிருந்து 6 மாதங்களுக்கு குறித்த சேவையினை வழங்க முடியும் என தெரிவித்தார்.

நாம் குறித்த காணொளியை பலமுறை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகளில் விரைவில் வழங்க உத்தேசித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தெரிவிக்கப்படவில்லை. மாறாக குறித்த சேவையினை எதிர்காலத்தில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன்னர் தற்போது நடைமுறையிலுள்ள பழைய கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை அவர்கள் இங்கு தெரிவித்திருந்தமை அவதானிக்க கிடைத்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகளில் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளதாக என பரவும் செய்தி தவறானவை  என கண்டறியப்பட்டது.

மேலும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு (COPF) மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போது, அங்கு எழுந்த சில கேள்விகளுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய பதிலினை மையமாக கொண்டு இந்த தகவல் தற்போது பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

அவர்கள் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய எதிர்க்காலத்தில் இதனை செயல்முறைப்படுத்த திட்டம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குதல் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்ததா?

Fact Check By: S.G.Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *