
INTRO :
தேர்தல் முடிவுக்கு பின் தவெக பெண்கள் பொலிஸாரை திட்டியதாக ன சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the clam):
<iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=52340969&shareKey=64c112a4162b7b2dc7eeb4465d7315c6″></iframe>
சமூகவலைத்தளங்களில் “இதான் தமிழக மக்கள்
எதிர்பார்த்த மாற்றம்
ஒரே பைக்கில் சென்ற மூன்று பெண்கள்.
தட்டிக்கேட்ட போலீசாரை ஒருமையில் பேசிய தவெக பெண்கள் இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்
இந்த நாடும் நாட்டு மக்களும்
நாசமாய் போகட்டும்.
“என இம் மாதம் 05 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (05.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இந்தியாவில் தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதற்கமைய தமிழக வெற்றிக் கழக கட்சியினர் 108 ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அந்த கட்சியினை சார்ந்த பெண்கள் பொலிஸ் அதிகாரியை மதிக்காது செல்லுவதாக ஒரு காணொளி இணையத்தில் வைரலாகின்றமை காணக்கிடைத்தது.
அந்த காணொளியை நன்கு அவதானித்த போது, ஜனநேசன் என்ற பக்கத்தில் Watermark காணப்பட்டது. ஆகவே குறித்த பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்வு செய்தோம்.
குறித்த ஆய்வின் போது இது கடந்த மாதம் 20 ஆம் திகதி (20.04.2026) அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் சில keyword களை பயன்படுத்தி பேஸ்புகில் தேடியபோது, குறித்த சம்பவம் அதே திகதியில் மற்றும் சில பேஸ்புக் பக்கங்களில் பதிவாகியிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த காணொளியை மையமாக கொண்டு நாம் தேடலினை மேற்கொண்ட வேளை கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.04.2026) times of india இணையத்தில் திருச்சி விமான நிலைய பொலிஸார், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மூன்று பெண் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்தமையும் காணக்கிடைத்தது.
அதற்கமைய கடந்த மாதம் நடந்த சம்பவத்தினை தேர்தலிற்கு பின்னர் தவெக ஆதரவாளர்கள் தவறாக நடப்பதாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தேர்தல் முடிவுக்கு பின் தவெக பெண்கள் பொலிஸாரை திட்டியதாக பரவும் காணொளி என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

