
இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

இன்று (09) நள்ளிரவு முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.12.09) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதனையும் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறிந்த பதிவில் இன்று (09) நள்ளிரவு முதல் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அரசாங்கத்தினால் அவ்வாறானதொரு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் பிரதான ஊடகங்களில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.
மேலும் குறித்த பதிவில் சிலர் இந்த சட்டம் இலங்கையில் அல்ல, அவுஸ்திரேலியாவிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து கமென்ட் செய்திருந்தனர்.

எனவே நாம் அது தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்த போது அவுஸ்திரேலியாவில் 16 வய்திற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.Link
எனினும் கடந்த 04 ஆம் திகதி சூரியன் செய்திகள் இணையதளத்தில் வெளியான செய்தியே மேற்குறிப்பிட்ட சமூக ஊடக பதிவிற்கு ஆதாரமாக அமைந்துள்ளது என்பதனை அறியமுடிந்தது.
குறித்த செய்தியில் அவுஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார்.
இதைத் தடுக்க, ‘ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024’ என்ற சட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
இது, வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, ‘டிக்டொக், எக்ஸ், மெட்டா’ ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியது.
இந்த சட்டத்தைப் பின்பற்றி, பிரான்ஸ், டென்மார்க், கிரீஸ், ருமேனியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளும் சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு செய்துள்ளன. எனதெரிவிக்கப்பட்டிருந்து.
எனினும் அந்த செய்தியின் தலைப்பானது “16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – மீறினால் 297 கோடி அபராதம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தலைப்பை ஆதாரமாகக் கொண்டே சமூக ஊடகப் பயனர்கள் இது இலங்கையில் அமுல் படுத்தப்பட்டுள்ள சட்டம் என தவறாக புரிதுக்கொண்டு இந்த தகவலை பகிர்ந்துள்ளனர் என்பதனை அறியமுடிகின்றது.
அவுஸ்திரேலியாவில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Link
ஊடக அமைச்சு
எனினும் இந்த தகவல் தொடர்பான கூடுதல் தெளிவினை பெறுவதற்காக நாம் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் செயலாளரை தொடர்புகொண்டு வினயிருந்தோம். இதன்போது இது போலியான தகவல் எனவும் அவ்வாறான எந்த சட்டங்களும் இதுவரை இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு சமயங்களில் ஊடகங்கள் தங்களுக்கான பயனர்களை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான தலைப்புகளுடன் செய்திகளை வெளியிடுகின்றனர். இந்த செய்திகளின் உள்ளடக்கங்கள் சரியாக இருந்தாலும் அதன் தலைப்பு மக்களுக்கு தவறான புரிதல்களை உருவாக்குகின்றன. எனவே ஊடகங்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சற்று அவதானத்துடன் செயற்பட்டால் மக்களை தவறாக வழிநடத்துவதில் இருந்து தவிர்க்கமுடியும்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டமானது இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன் அது அவுஸ்திரேலியாவில் அமுல்படுத்தப்பட்ட சட்டம் என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


