
சமீபத்தில், விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்ட (Animal-print) ஆடைகளை அணிந்த இரண்டு நபர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பயனர்கள், இது பங்களாதேஷின் வனத்துறையின் சீருடை என தெரிவித்தே பகிர்ந்து வருகினற்னர்.
எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் பங்களாதேஷ் இன் Forest Department Uniform வால் மட்டும் தான் இல்லை என தெரிவித்து கடந்த 2026.04.25 பதிவிடப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த புகைப்படத்தில் இது பங்களாதேஷின் வனத்துறை அதிகாரிகளின் சீருடை என குறிப்பிடப்பட்டிருந்தமையினால் நாம் அது தொடர்பில் ஆராய்ந்த போது 2026, ஏப்ரல் 21 திகதியன்று Daily Sun பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியறிக்கையை காணமுடிந்தது.
வைரலான அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட அதே இரண்டு அதிகாரிகள், அதே பின்னணி மற்றும் சூழலுடன் அந்தச் செய்தியறிக்கையிலும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் முற்றிலும் வேறானவையாக காணப்பட்டது.

மேலும் நாம் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தோம்
அதனடிப்படையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பங்களாதேஷ் காவல்துறை சீருடை குறித்து படைப்பிரிவினரிடையே நிலவும் அதிருப்தி மற்றும் களப்பணியில் உள்ள அதிகாரிகள் எழுப்பியுள்ள கவலைகளைத் தொடர்ந்து, அந்தச் சீருடையை மாற்றியமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
படைப்பிரிவினரிடையே நிலவும் ‘எதிர்மறையான விருப்புகள்’ மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, காவல்துறை தலைமையகம், உள்துறை அமைச்சிற்கு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. அதில், ‘காவல்துறை உடை விதிகள்-2025’ (Police Dress Rules-2025) என்பதில் திருத்தங்களை மேற்கொள்ளவும், பல்வேறு பிரிவுகளுக்கு புதிய வண்ணத் திட்டங்களைப் பரிந்துரைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் காவல்துறை தலைமையகம் சமர்ப்பித்த முன்மொழிவின்படி, மாநகர காவல்துறை அதிகாரிகள் வெளிர் ஆலிவ் (Light Olive) நிற சட்டைகளை அணிவார்கள், மாவட்ட மற்றும் இதர காவல்துறை பிரிவினர் அடர் நீல (Deep Blue) நிற சட்டைகளை அணிவார்கள். அனைத்துப் பணியாளர்களுக்குமான காற்சட்டை கபில நிறத்திலேயே தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த மாற்றங்கள் APBn, SPBn, SB, CID மற்றும் RAB ஆகிய பிரிவுகளுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் பார்க்கும் போது உண்மையான புகைப்படத்தை மாற்றி இவ்வாறு விலங்குகளின் தோலின் வடிவிலான சீருடையை செயற்கையாக எடிட் செய்துள்ளனர் என்பதனை அறிய முடிகின்றது.
வைரலான புகைப்படம் மற்றும் செய்தி அறிக்கையில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒப்பீட்டை கீழே காணலாம்

மேற்குறிப்பிட்ட விதத்தில் பங்களாதேஷ் காவல் துறையின் சீருடை மாற்றம் தொடர்பில் வெளியான மேலும் சில செய்தி அறிக்கைகளை பார்வையிடவும் Link | Link
மேலும் நாம் இந்த புகைப்படத்தினை AI-Detector tools மூலம் ஆய்விற்கு உட்படுத்திய போது இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பங்களாதேஷின் வனத்துறையின் சீருடை என பகிரப்பட்ட புகைப்படமானது தவறானது என்பதுடன், உண்மையான புகைப்படம், பங்களாதேஷ் காவல்துறையின் மாற்றியமைக்கப்பட்ட சீருடைகளை அணிந்திருக்கும் இரண்டு அதிகாரிகளையே காட்டுகிறது. சமூக வலைதளங்களில் வைரலான அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


