2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க FBI குழு இலங்கை வந்துள்ளதா? 

Misleading சமூகம் | Society

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் டொலர் பணத்தையும், அமெரிக்க தபால் துறைக்கு செலுத்த வேண்டியிருந்த ஆறு இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணத்தையும் சைபர் குற்றவாளிகள் வேறு கணக்குகளுக்கு மாற்றியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, FBI முகவர்கள் குழுவொன்று ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

திருடப்பட்ட பணம் சம்பந்தமான விசாரனைக்காக FBI இலங்கை வந்துள்ளது!

அமெரிக்கத் தூதரகத்தில் CID உடனும் கலந்துரையாடல்! என தெரிவித்து குறித்த பதிவு 2026.05.23 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

அதேபோன்ற இந்த தகவலை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

FB 

FB

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கை திறைசேரி நிதியிலிருந்து திருடப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மற்றும் அமெரிக்க தபால் துறைக்கு செலுத்த வேண்டியிருந்த 6 இலட்சம் டொலர் காணாமல் போனமை ஆகிய இரு சம்பவங்களிலும் இடம்பெற்றுள்ள சைபர் திருட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கு, உள்நாட்டு அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமெரிக்க ஃபெடரல் புலனாய்வுப் பிரிவின் (FBI) குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, சிரேஷ்ட அதிகாரி ஒருவர் Daily Mirror பத்திரிகைக்கு தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் 

இந்த விடயம் குறித்த உண்மை தகவல்களை அறிந்துக்கொள்ள இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பிரிவிடம் நாம் வினவியபோது, இலங்கை பொது திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் டொலர் சைபர் தாக்குதல் மூலம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் FBI நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது உண்மைதான் என்றபோதிலும், இதற்காக சிறப்பு FBI குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

சர்வதேச மட்டத்தில் குற்றப் புலனாய்வு ஒத்துழைப்பிற்காக, இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் FBI சட்ட இணைப்பாளர் (Legal Attaché) ஒருவர் பணியாற்றி வருவதாக அவர்கள் தமது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.Link | Link

அதாவது, அமெரிக்க தூதரகத்தில் உள்ள எஃப்.பி.ஐ சட்ட இணைப்பாளர் (FBI Legal Attaché), ஒரு நிரந்தர அதிகாரியாக சர்வதேச சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கிறார். (FBI International Operations — Legat )

தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான விடயங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, துல்லியமான தகவல்களைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Daily Mirror பத்திரிகையும் அமெரிக்க தூதரகத்தின் இந்த விளக்கத்தை, Daily Mirror — US Embassy Responds (May 23) எனப் பின்னர் வெளியிட்டிருந்தது.

2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு மற்றும் தபால் மோசடி

இலங்கை அரசாங்கத்தினால் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்தவிருந்த கடன் தவணைப் பணம், சம்பந்தப்பட்ட தரப்பைத் தவிர்த்து வேறொரு தரப்பின் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு, நிதி அமைச்சின் கீழுள்ள வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக இடம்பெற்ற பாரிய டிஜிட்டல் நிதி மோசடி தொடர்பில், மத்திய வங்கியின் மேற்பார்வை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.Link

மேலும், இந்த 2.5 மில்லியன் டொலர் பணத்திற்கு மேலதிகமாக, அமெரிக்க தபால் அதிகாரிகளுக்கு இரண்டு வருட காலப்பகுதியில் செலுத்தவிருந்த மேலும் 625,000 டொலர் பணம் சைபர் குற்றவாளிகளினால் திருடப்பட்டமை குறித்தும் சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் , SL CERT உள்ளிட்ட நிறுவனங்கள், வெளிநாட்டு நிபுணர் குழுக்களுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கை பொது திறைசேரியிலிருந்து சைபர் தாக்குதல் மூலம் 2.5 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் திருடப்பட்டமை தொடர்பில், மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழஙகுவதற்காக சிறப்பு FBI குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளியான செய்திகள் போலியானவை என அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த விசாரணைகளுக்கு FBI இன் உதவி நாடப்பட்டு வருவது உண்மைதான் என்றபோதிலும், இதற்காக தூதரகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ FBI சட்ட இணைப்பாளர்கள் (Legal Attaché) ஊடாக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க FBI குழு இலங்கை வந்துள்ளதா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *