ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என பரவும் காணொளி உண்மையா ? 

False சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel

INTRO :

ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “ ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து ஒரு பசு சிறுமியைக் காப்பாற்றியது. “என இம் மாதம் 16 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (16.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இணையத்தில் வைரலாகின்ற குறித்த காணொளியினை நாம் நன்கு அவதானித்தபோது, அதில் இருந்த சில காட்சிகள் இயற்கைக்கு முரணாக காணப்பட்டது.

குழந்தையை ரயிலில் மோதாமல் காப்பாற்ற பசு குழந்தையிடம் வந்த நொடியில் குழந்தை பசுவின் காலுகளுக்கு நடுவில் நிற்கின்றது 

மேலும் பசு ரயிலின் அருகே வருவதை போன்று காட்டப்படுகின்றது, வேகமாக வரும் ரயில் அருகே காற்றுழுத்தம் காணப்படும், ஆயினும் குறித்த பசுவிற்கு அதனால் ஏற்படும் தாக்கம் எதுவும் குறித்த காணொளியில் காணக்கிடைக்கவில்லை.

அத்துடன் ரயில் மாற்று பாதைக்கு மாறுவதற்காக தண்டவாள அமைப்பும் காணப்பட்டது. அதில் இருந்த அமைப்பானது வழமைக்கு மாறாக காணப்பட்டமையும் அவதானிக்க கிடைத்தது.

ஆகவே குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழ நாம் செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியில் இதனை உட்செலுத்தி ஆய்வினை மேற்கொண்டடோம். குறித்த தேடலின் போது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என பரவும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என பரவும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *