
INTRO :
கொழும்பில் குண்டு வெடிப்புத் திட்டம் தீட்டிய நபர் கைது என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ 🛑 BREAKING NEWS
#கொழும்பில்_குண்டு #வெடிப்பு_திட்டம் #முறியடிப்பு_கஞ்சிப் #பானை_இம்ரனின் #முக்கிய_கூட்டாளி_கைது
21 Apr 2026 கொழும்பு நகரில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதச் சந்தேக நபர் ஒருவரைப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு (TID) அதிரடியாகக் கைது செய்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவன் ‘கஞ்சிப்பானி இம்ரான்’ என்பவனின் நேரடி வழிநடத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் சதி தீட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கொழும்பின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்ய இந்தச் சந்தேக நபர் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையின் போது பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில் கொழும்பு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
CFNews“என இம் மாதம் 21 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (21.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 7 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் நேற்று சமூகவலைத்தளங்களில் கொழும்பு நகரில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் மக்கள் மத்தியில் மிகவும் வேகமாக சமூகவலைத்தளங்களில் பரவியமை காணக்கிடைத்தது.
குறித்த செய்தியினை சிங்கள மொழியில் பல பிரதான ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. Link 1 | link 2 | link 3
நாம் குறித்த தகவல் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம், வினவியபோது. கொழும்பு மீது தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து சமூக ஊடகங்களிலும் சில முக்கிய ஊடகங்களிலும் வெளியிடப்படும் தகவல் உண்மைக்கு முரணானது என எமக்கு தெரிவித்தார்.
மேலும் அவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிடவில்லை என்றும், பொலிஸிற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின்படி, காஞ்சிபானி இம்ரானுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் கொழும்பு 15-ஐ சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், ஜா-எலவின் கலா வீதிய பகுதியில் நேற்று முன்தினம் (20.04.2026) நடத்தப்பட்ட சோதனையின் போது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார் என்றும், ஆனால் தாக்குதல் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், கைது செய்யப்பட்ட நபர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் கொழும்பில் குண்டு வெடிப்புத் திட்டம் தீட்டிய நபர் கைது என பரவும் செய்தி தவறானவை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

